தற்பொழுது முதலீடு என்பது தங்கத்தில் மட்டுமே அனைவரும் செய்ய நினைக்கின்றனர். காரணம் நிலத்தின் மதிப்பு நிலையானது அல்ல மாறாக தங்கத்தின் மதிப்பானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை ஆனது சற்று சரிந்து வருவது மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.
ஏப்ரல் 8 2025 ஆம் தேதியான இன்று கோயம்புத்தூரில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8225 ரூபாயாகவும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8636 ரூபாயாகவும் உள்ளது. ஏப்ரல் 7-ம் தேதியோடு ஒப்பிடும் பொழுது 60 ரூபாய் முதல் 63 ரூபாய் வரை இன்று தங்கத்தின் விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதிலும் தங்கத்தின் விலை ஆனது குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8225 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8973 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தை விட 24 கேரட் தங்கத்தின் விலை ஆனது சற்று அதிகரித்திருப்பதை காண முடிகிறது.
உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் சந்தை மாற்றங்களை பிரதிபலிப்பாக தங்கத்தின் விலை உள்ளது என்றும் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக நான்காவது நாளாக சரிந்து காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.