மீண்டும் குறைந்துள்ள தங்கத்தின் விலை!! அச்சத்தை ஏற்படுத்தும் உச்சம்!!

Gold prices have fallen again

தங்கம் விலை சராசரியாக ஏறிக்கொண்டே தான் செல்கிறது. பலரும் தங்கம் வாங்குவது கைகளுக்கு எட்டாத ஒன்று என்றே தீர்மானித்து விட்டனர். அவர்களின் மனக்குமுறலுக்கு ஆறுதலாக கடந்த இரு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8738. இது நேற்றைய விலை விட ரூபாய் 44 கிராமிற்கு குறைந்துள்ளது. ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ₹.69,904. நேற்றைய விலை ஆனது ₹.70256. கிட்டத்தட்ட 352 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நாளை தங்கம் வாங்குபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8010. நேற்றைய விலை 8050. கிராமிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹.64080. இது நேற்றைய விலை விட 320 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமின் விலை நேற்றையது போலவே ரூபாய் 106 ஆக உள்ளது. ஒரு கிலோ ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. சபீம முதலில் பெரும்பாலும் வெள்ளியில் உங்கள் முதலீடுகளை செலுத்துவது பிற்காலத்தில் உதவும் என்றே பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram