தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!! அதிர்ச்சியில் மக்கள்!!

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், தங்கம் விலை ரூ.2,000 உயர்வைக் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, வட்டி விகிதக் குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளது. இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசனில் கூடுதல் தேவை ஏற்பட்டு வருவது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த வாரமும் விலை மேல்செல்லவும், கீழ்செல்லவும் இருந்த நிலை நீடித்தது. குறிப்பாக, நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.1,400 உயர்ந்தது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,200, சவரன் விலை ரூ.89,600 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் விலை உயர்வு ஆகியுள்ளது. ஒரு கிராம் ரூ.167, ஒரு கிலோ ரூ.1,67,000 விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை சந்தை மீதான கவனம் அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் இந்த தங்க விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram