சர்ப்ரைஸ் ஆக குறைந்த தங்கத்தின் விலை!! குஷியில் நகை பிரியர்கள்!

Gold prices surprisingly fall

சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஆபரண தங்கத்தின் விலை குறைவதும்,அதிகரிப்பதுமாக  இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (மே 24) பவுனுக்கு ரூ.400 அதிகரித்து இருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் குஷியில் உள்ளனர். சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து உள்ளது. நேற்று (மே 24) ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ 8,990 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும்,ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.71,920 க்கு விற்பனை செய்யப்பட்டது.

சுபமுகூர்த்த தினங்கள் வரிசையாக வருவதால் திருமண விசேஷங்கள் மற்றும் மற்ற விசேஷங்களும் நடைபெறுவதால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் சிலர் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் விலை குறைந்தால் வாங்கி விடலாம் என்று தங்கத்தின் விலையை உற்று நோக்குபவர்கள் அதிகம்.

இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் குறையவில்லை. ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது இந்த மாத துவக்கத்திலிருந்து ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தங்கம் விலை ரூ.72 ஆயிரத்து நெருங்கி இருப்பது நகை பிரியர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் பெரிதாக இல்லை. ஒரு பவுன் ஆபரண தங்கத்திற்கு ரூ.320 குறைந்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 71,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டாலும் தற்போது ஒரு கிராம் ரூ.111 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி உலக அளவில் பொருளாதார சூழல் தங்க விலையை அடிப்படையை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த வரி விதிப்பு கொள்கை மாற்றத்தால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் கொண்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் விலை மாற்றம்:
20.5.2025 ஒரு பவுன் விலை ரூ.69,650.
21.5.2025 ஒரு பவுன் விலை ரூ.71,440.
22.5.2025 ஒரு பவுன் விலை ரூ.71,800.
23.5.2025 ஒரு பவுன் விலை ரூ.71,520.
24.5.2025 ஒரு பவுன் விலை  ரூ.71,920.மற்றும்
25.5.2025 ஒரு பவுன் விலை ரூ. 71,600(இன்று)

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram