அமெரிக்காவில் இந்திய மாணவி கோமா!! பத்து நாட்களாக தந்தைக்கு வழங்கவில்லை விசா!!

Goma, an Indian student in America

அமெரிக்காவில் வாஷிங்டனில், இந்திய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14ஆம் தேதி விபத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் மீது கார் மோதி பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. மகள் உசுருக்கு போராடி வரும் நிலையிலும், 13 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் விசா வழங்கப்படவில்லை. அவரின் பெயர் நீலம். இவர் மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 35 வயது ஆகிறது. மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் படித்து வருகிறார்.

இவரது தந்தையார் தனாஜி சிண்டே. கடந்த 14ஆம் தேதி மகளுக்கு ஆக்சிடென்ட் ஆகி உள்ளது. மாலை நடைபயிற்சி மேற்கொண்ட போது வேகமாக வந்த கார் மோதி தலை, முகம் இதயம் ஆகிய பகுதிகளில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. அடியின் காரணமாக அவர் கோமா ஸ்டேஜில் உள்ளார். அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 16ஆம் தேதி தான் அவருக்கு மகள் ஆக்சிடென்ட் ஆகியதே தெரியும். சூழ்நிலை எப்படி இருக்க தற்சமயம் வரை தந்தைக்கு விசா கிடைக்கவில்லை. இந்த செய்தி காட்டுத்தீயாக பரவிய பின், நாளை காலையில் அவருக்கு நேர்காணல் உள்ளது என்று அழைப்பு வந்துள்ளது. நடுத்தர வர்க்கம் என்றால் உயிருக்கு மதிப்பு தர மாட்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஷிண்டே மகளுக்கு நடந்த விபத்து குறித்து கவலைப்படுவதா! விசா கிடைக்காமல் பரிதவிப்பதா! என்று மனக் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram