TNPSC குரூப்-1 & குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு நற்செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு அவரவருடைய மாவட்டங்களிலேயே இலவச பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் வெளியிட்டு இருக்கிறார். அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு அவர்களுடைய வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
பொதுவாக தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும் என்றால் பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும் இந்த போட்டி தேர்வுகளுக்கு பல ஏழை எளிய மாணவர்களும் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு இந்த திட்டத்தினை உருவாக்கியுள்ளது. மேலும் இதன் மூலம், சிறந்த பயிற்சியாளர்களை வைத்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் 9 காலை 10:30 மணியளவில் துவங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட இருக்கிறது எனவே மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.