திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக பல்வேறு அரசியல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினர். இந்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை முதலியவற்றை 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் போன்றவர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தலைமையகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தலைமைச் செயலகத்தில் வைத்து 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் பொழுது உங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும் என்றும் சமாதானம் கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் என அனைவரும் சிறிது சமாதானம் அடைந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி ஆன நேற்று முதல் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இதுவரை அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் நிரந்தர பணி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்புகள் என எதுவும் அறிவிக்கப்படாததால் கோபமடைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது வருகிற மார்ச் 23ஆம் தேதி முதல் உண்ணாவிரட்ட போராட்டம் இருப்பதாக அறிவித்திருக்கிறது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர் கொண்டிருக்க கூடிய திமுக அரசிற்கு இந்த உண்ணாவிரத போராட்டம் என்பது பலத்த அடியாக இருக்கும் என்றும், இதனை சரி செய்வதற்கு உடனடியாக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.