வரும் நாட்களில் அரசு பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது தண்ணீர் குடிப்பதற்கான இடைவேளை நேரம். இக்காலங்களில் எல்லாம் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதன் அத்தியாவசியத்தை பற்றி துளியும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பல நோய்களுக்கு எளிதில் அஃபெக்ட் ஆகிறார்கள். மேலும் சிறுநீர் பிரச்சனை மூலம் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதனை மாணவர்களுக்கு பழக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு தற்சமயம் மதிய இடைவேளை மட்டுமல்லாது தண்ணீர் இடைவேளையும் மாணவர்களுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்காக காலை 11 மணி, நண்பகல் ஒரு மணி, பிற்பகல் 3 மணி ஆகிய நேரங்களுக்கு பெல் அடிக்கப்படும். அப்பொழுது கட்டாயமாக மாணவர்கள் அவரவர் கொண்டுவரும் தண்ணீர் பாட்டிலின் மூலம் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் காலையில் பிரேயரின் போது மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதை குடிக்காததன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு, அரசு பள்ளிகளுக்கு வலியுறுத்தி உள்ளது. இதனால் மாணவர்களின் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஏதுவாக அதிகரிக்கும். மேலும் வாட்டர் கேனில் கொண்டு சேரும் தண்ணீரை மீண்டும் வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது கேரளாவில் நடைமுறை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஆதரித்து வருகின்றனர்.