தமிழ்நாட்டில் 17 அம்சங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இன்று அரசு பணியாளர்கள் துவங்கி உள்ளனர். இதில் 13 தொழிற்சங்கங்கள் உடன்பட்டு போராட தயாராக இருந்தனர். ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நோ வொர்க் நோ பே என்ற வாசகத்தோடு தமிழ்நாடு நிர்வாகம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்று ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இதுவரை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே அரசு பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சிரமம் ஏற்படுவதாக தகவல் கிடைத்து வருகிறது. மேலும் பஸ் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. கேரளாவிற்கு செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. ஏனென்றால் கேரளாவில் இந்த வேலை நிறுத்த தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. மேலும் மற்ற அரசு பணிகள் முடிந்த அளவு மக்களை இடையூறு தராத வகையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிரைக் காரணமாக கேரளாவில் தனியார் பள்ளிகள் பஸ்கள் வாகனங்கள் ஆகியவை தடைபட்டுள்ள காரணத்தினால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பெரும்பாலும் சிரமம் உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.