புதுடெல்லி: கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. லடாக் யூனியன் பிரதேச கவர்னராக ஜம்மு காஷ்மீரில் சேர்ந்த மூத்த பாஜக உறுப்பினர் கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவா லடாக் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆகியவற்றிற்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது . அந்த வகையில் கோவா மாநில கவர்னராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட உள்ளார். மேலும், இவர் மூத்த அரசியல்வாதியாக இருந்தவர்.
இது மட்டுமல்லாது விமான போக்குவரத்து துறையில் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா மாநில கவர்னராக ஆஷிம் குமார் கோஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் உயர்கல்வித் துறையில் பேராசிரியராக நிர்வாக துறையில் அனுபவம் பெற்றவர் ஆவார். இதேபோன்று லடாக் யூனியன் பிரதேச கவர்னராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்முவை சேர்ந்த இவர் மூத்த பாஜக உறுப்பினராக இருந்தவர்.
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகர் ஆகவும் பதவியில் இருந்தார். லடாக் துணை நிலை கவர்னராக இதற்கு முன்னர் பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் பி டி மிஸ்ரா ராஜினாமா செய்துள்ளார்.
பி டி மிஸ்ரா ராஜினாமா செய்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு லடாக் துணைநிலை கவர்னர் பதவியை ஏற்றுக்கொண்டார். லடாக் துணைநிலை கவர்னர் பதவியை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் உறுதியளித்துள்ளார்.