2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு முடிவை அடுத்து இந்த ஆண்டிற்கான ஜிஎஸ்டி விவரம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டு எட்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஜூன் மாதம் ஜி எஸ் டி வசூல் ஆனது 1,84,597 லட்சம் கோடி ரூபாய் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஜி எஸ் டி வசூல் ஆனது 1,73,813 லட்ச கோடியாக இருந்தது. இது சென்ற ஆண்டு கணக்கீடை விட ஆறு புள்ளி இரண்டு சதவீதம் உயர்வாக இந்த ஆண்டு செலுத்தப்பட்டுள்ளது. வணிக ரீதியாக இந்தியா வளர்ந்து வருகிறது என்பதை இதற்கு உரிய சான்று என்று மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வசூல் ஆனது தமிழகத்தில் மட்டுமே 10,676 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிக ஜிஎஸ்டி செலுத்தும் மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தமிழகம் நான்காவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த மாத வசூல் ஆனது கடந்த இரண்டு மாத வசூலை விட குறைவாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் ஆனது 4.6 சதவீதம் அதிகரித்து ரூ 1.38 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதியில் ரூபாய் 46,960 கோடியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.