பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடுதலை படை என்ற பெயரில் புரட்சி படை என்ற பெயரில் புரட்சி பாடினர் பல்வேறு இடங்களில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கொரில்லா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 23 பேர் உயிரிழந்தனர். ராணுவ உயர் மட்ட அதிகாரி ஒருவர் இதில் உயிரிழந்துள்ளார்.
கொரில்லா தாக்குதலின் போது இராணுவ கட்டமைப்புகள் மற்றும் நுண்ணறிவு பிரிவு தொடர்புடைய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பலுசிஸ்தானின் கலாத், ஜமுரான், மஸ்தங் மற்றும் குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானிய படையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், நுஷ்கி, பாஞ்ச்குர் மற்றும் தல்பந்தின் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக புரட்சி படை சார்பில் வெளியிட்ட செய்தியில், பலூச் தேசிய விடுதலை அடையும் வரை ஆயுதப் போராட்டம் தொடரும் என்று உறுதி மொழியை மீண்டும் மீண்டும் உறுதி செய்வதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள் என்றும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலூச் தேசிய விடுதலை அடையும் வரை இந்த தாக்குதல் தொடரும் என பலுசிஸ்தான் விடுதலை படை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் நுண்ணறிவு பிரிவுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் ஆகியவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.