cricket: நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் அதிரடியான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி. பேட்ஸ்மேன்களை கட்டு படுத்த முடியாமல் திணறிய குஜராத் அணி.
ipl தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் யார் ப்ளே ஆஃப் செல்வார்கள் யார் எந்த இடம் என்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் இடையில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 204 ரன்கள் சேர்த்தது. இதில் கில் மற்றும் பட்லர் இருவரும் சிறப்பாக விளையாடி கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் எடுத்திருந்தனர்.
இரண்டாவதாக ராஜஸ்தான் அணி களமிறங்கி அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தியது. தொடக்க வீரராக கலமிரங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் சூர்யவன்ஷி இருவரும் சிறப்பான தொடக்கத்தை வெளிபடுத்தினர். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தின் அணைத்து திசைகளிலும் சிக்ஸர் பவுண்டரி என பறக்க விட்டனர். குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எப்படி கட்டுபடுத்துவது என குழப்பத்தில் இருக்க இவர் 35 பந்துகளில் சதம் விளாசினார்.
இதில் 11 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியில் 265 ஸ்ட்ரைக் ரேட்டிலும், நிதிஷ் ரானா 200 ஸ்ட்ரைக் ரேட்டிலும், ரியான் பராக் 213 ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி 15.5 ஓவரில் 212 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி.