Cricket: மும்பை மற்றும் குஜராத் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை அணி மற்றும் குஜராத் அணி இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவு பெற்ற நிலையில் குஜராத் அணி 196 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. குஜராத் வழியில் அதிகபட்சமாக சாய் புதன் 41 பந்துகளில் 63 ரண்களும் கிளாஸ் பட்லர் 39 ரண்களும் கில் 38 ரண்களும் எடுத்திருந்தன.
மும்பை அணியின் கேப்டன் இரண்டு விக்கெட்டுகளும் போல்ட் சாகர் முஜீப் என தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தன. தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்திலே தடுமாறியது. வழக்கம் போல் ரோஹித் ஷர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிக்கல்டன் 6 ரன்களில் ஆட்டமிழக்க சுர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் போராடி வர இறுதி வரை இலக்கை எட்ட முடியாமல் 160 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. இந்த வருடம் தொடங்கிய எந்த போட்டியிலும் மும்பை அணி தோல்வியடைந்த நிலையில் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெரும என பார்ப்போம்