நைஜீரியா: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியா ஒன்று. நைஜீரியாவில் ஐஎஸ், போகோ ஹராம் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உள்ளது. கொலை கொள்ளை பணத்திற்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமல்லாது கால்நடைகளையும் கடத்தும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர் சில கடத்தல் கும்பல்கள்.
இந்த கடத்தல் கும்பல்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு இடையே மோதல்கள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அந்நாட்டில் பிலெட்டுவா மாகாணத்தில் அமைந்துள்ள ரியாம் நகரின் டாகோஸ் கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த கிராம மக்கள் மீது சரமாரியான துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இருபது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாமல் வீடுகள் தீ வைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திடீரென நடத்திய தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.