சமீப காலங்களில் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் இதில் ரெகுலராகவும் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குபவர். அவர்களுக்கு உங்கள் ஷாப்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங்கை தொடர இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றபடி பல மோசடி நடந்து வருகிறது. மேலும் அது நீங்கள் ஷாப்பிங் செய்யும் ஆப்பின் பெயரிலேயே சிறு மாற்றமடைந்து வரும் என்பதால் மக்கள் எளிதாக ஏமாறுகிறார்கள். அந்த ஆப்பின் பெயரில் நுணுக்க மாற்றங்களை செய்துதான் ஆக்டர்ஸ் மெசேஜ் செய்கிறார்கள். அந்த லிங்கை தொட்டு காட்டின் எண்ணை உள்ளிட்டவுடன் ஹேக்கர்ஸ் வங்கி கணக்கை சூறையாடி விடுவர். மேலும் உங்கள் பார்சல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆப்ஸ்களின் நேமில் சிறு மாற்றம் செய்து இந்த லிங்கை கிளிக் செய்து ஷாப்பிங் தொடரவும் என்று வந்தால் உரிய ஆப்ஸ் களின் உள்ளே சென்று ஸ்டேட்டஸ் சரி பார்த்துக் கொள்ளவும்.
அதுபோக பல சலுகைகள் வழங்கி விளம்பரங்கள் மூலம் பல மோசடி ஆப்களையும் பரிந்துரைத்து வருகின்றனர். இது குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் அடிக்கடி செய்யும் நண்பர்களை தான் இந்த ஹேக்கர்ஸ் வலை விரிக்கின்றனர். மேலும் அன்ஆர்த்தரைஸ்ட் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதன் மூலமும் அந்த மொபைல் எண்ணின் சொந்த தரவுகள் திருடப்படுகின்றன. அதனை விற்றும் சம்பாதிக்கின்றனர். இதனால் முடிந்த அளவு அறிமுகம் இல்லாத லிங்க்ஸ்களையும், ஆப்ஸ்களையும், மெசேஜ் கலையும் ஓபன் செய்யாமல் விட்டு விடுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அதுவும் தவிர்த்து ஏதேனும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மோசடிகள் நடந்தால் உடனே சைபர் செக்யூரிட்டி நம்பர் ஆன 1930 க்கு கால் செய்து புகார் செய்யவும். அல்லது cyber security.com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை தெரிவிக்கவும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.