பெய்ஜிங்: கொரோனா காலத்திற்குப் பிறகு சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கொரோனா காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்வது குறைந்து கொண்டே இருந்தது.
சுற்றுலாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் கட்டத்தில் சீனா இருக்கிறது. அதன்படி விசா கொள்கையை தளர்த்தி உள்ளது. மற்றும் நாடுகளைப் போலவே வெளிநாட்டிற்கு செல்லும் நான் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது.
சீனா தனது விசா கொள்கையை இதற்கு முன்னர் இல்லாமல் தற்போது தளர்த்தியுள்ளது. பழைய விதிமுறைகளில் இருந்து பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 74 நாடுகளைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கு சீனா செல்லலாம் என்று விதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அதிகரிக்க சீனா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024 இல் ரெண்டு கோடி வெளிநாட்டவர்கள் விசா இல்லாமல் சீனாவிற்கு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை என்பது மூன்றில் ஒரு பங்கு என கூறுகிறது சீனா.
விசாவுக்கு விண்ணப்பிப்பது, அதனை நடைமுறை கொண்டு வருவது என்பது கடினமான விஷயம் என்பதை விசா இல்லாமல் சீனா செல்லலாம் என்பது உண்மையாகவே உதவியாக இருக்கும். 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் 31.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். ஆனால் அதற்குப் பிறகு 13.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே சீனா சென்றுள்ளனர்.
பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக உள்ளதால் வெளிநாட்டவர்கள் குறைவாக இருக்கின்றனர். பிரான்ஸ் ஜெர்மனி நெதர்லாந்து ஸ்பெயின் மலேசியா மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனா செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், நான்கு மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தானிய நாடு ஆகியவை லிஸ்டில் சேர்க்கப்பட்டது. ஜூலை 16ஆம் தேதி அஜர்பைஜான் கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 75 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது சீனா.