Cricket: இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் குறித்து இணையத்தில் தற்போது ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. அதில் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் அனைத்து இடத்திலும் களமிறங்கி விளையாடும் மிகச்சிறந்த வீரர் கே எல் ராகுல்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டி முடிந்த நிலையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி பல சாதனைகளை படைத்தும் தோல்விதான் அடைந்தது.
அதில் இந்திய அணியின் வீரர்கள் ஐந்து சதங்களை பதிவு செய்தனர் இருந்தபோதிலும் வெற்றி அடைய முடியவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரரான கே எல் ராகுல் தான் தற்போது அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படுகிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் ஆடும் விதத்தினை இணையத்தில் பகிர்ந்து விராட் கோலிக்கு அடுத்தபடியாக அடுத்த விராட் கோலி இவர்தான் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் மூன்றாவது மற்றும் நான்காவது டி20 ஃபார்மெட்டில் நான்காவது தொடக்க வீரர், ஒரு நாள் போட்டி தொடரில் தொடக்க வீரர் நான்காவது ஆறாவது என எந்த இடத்திலும் களமிறங்கி அந்த இடத்திற்கு ஏற்றவாறு அணிக்கு தேவையான ரண்களை சேர்த்து சிறப்பாக விளையாடும் ஒரு மிகச்சிறந்த வீரர். அதுபோல டெஸ்ட் போட்டியில் தொடக்க விழா களமிறங்கி முதலில் 42 ரங்களும் இரண்டாவது இன்னிசையில் 137 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் இந்திய அணியில் ஒரு வரப்பிரசாதம் கே.எல். ராகுல் தான் என பதிவிட்டு வருகின்றன.