பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கட்சி மற்றும் சொந்த பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இதனால் கட்சி நிறுவனங்களும் பிளவு பட்டுள்ளன. மேலும் கட்சித் தொண்டர்களும் இருவரும் இடையே சிக்கி தவிக்கின்றன. ஏற்கனவே இந்த பிரச்சனை முற்றி போன நிலையில், தற்சமயம் புது பிரச்சினையை கிளப்பியுள்ளனர். முதலில் பாமக தலைவராக இருந்த அன்புமணியை பதவியில் இருந்து நீக்கி தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். பின்னர் அன்புமணிக்கு கீழ்ப்படியும் நிர்வாகிகளையும் தலைமை நிர்வாகத்தில் இருந்து நீக்கி புதிய ஆட்களை நியமித்திருந்தார்.
மற்றொருபுறம் அன்புமணியும் பொதுக்குழு கூட்டம், நிர்வாக கூட்டம் ஆகியவற்றை மாவட்ட வாரியாக சந்தித்து பேசி வந்து இருந்தார். அதனை அடுத்து இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில், வரும் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனை மறுத்த அன்புமணி அடுத்த கணமே அவரது ஆதரவாளர்களை வைத்து தலைவர் இல்லாத செயற்குழு கூட்ட முடிவுகள் செல்லுபடி ஆகாது என்று அவர் கலந்து கொள்ளாததை எடுத்துரைத்துள்ளார். இதனை அடுத்து ஐந்து பாமக உறுப்பினர்கள் இருவரின் சமரசம் வேண்டி தீக்குளிக்க முற்பட்டு இருந்தனர். இதனை அடுத்து ராமதாஸ் பொதுக்குழு கூட்டம் நடத்த ஆயுத்தம் ஆகிக்கொண்டிருக்கிறார். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதவும் முற்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை தேர்தல் ஆணையம் ராமதாசை தலைவராக நியமிப்பார் எனில் அன்புமணிக்கு பேரிடியாக விழும் நிலைமை உள்ளது.


