ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் புதிய சுகாதார மந்திரியாக எலிசபெத் லான் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற சிறிது நேரத்தில் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் எலிசபெத் லான் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதவி ஏற்பினை தொடர்ந்து சுவீடன் பிரதமர் உல் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் மற்றும் புதிய சுகாதாரத்துறை மந்திரி எலிசபெத் லான் ஆகியோர் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. நேரலையில் செய்தியாளர்களுடன் சந்தித்தபோது சுகாதாரத்துறை மந்திரி எலிசபெத் லான் ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் திடீரென மயங்கி விழுந்தது அந்நிகழ்ச்சியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. மயங்கி விழுந்த உடன் அருகில் இருந்த துணை பிரதமர் எப்பா உள்ளிட்ட செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சென்று எலிசபெத் லானுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.
சிகிச்சை முடிந்த பிறகு எலிசபெத் லான் தன்னுடைய உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில் கூறியதாவது, உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பதவியேற்ற சிறிது நேரத்திலேயே புதிய சுகாதார மந்திரி எலிசபெத் லான் மயங்கி விழுந்த சம்பவம் அனைவரையும் பதட்டத்தில் ஆழ்த்தியது.


