கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!! 10 மாவட்டங்களில் லிஸ்ட் இதோ!!

Here is the list of 10 districts!!

கேரளா: தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனத்த மழையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ திட்டமிட்டு உள்ள தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்திருக்கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கண்ணூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரிட்டி தாலுகாவில் மழையின் காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உறைவிட பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் பயிற்சி மையங்கள் சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ, அங்கன்வாடிகள் உள்ளிட்டவைகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலக்காடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் சேர்தலா, குட்டநாடு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டியூஷன் சென்டர்கள், ப்ரொபஷனல் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளது
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram