அடுத்த 7நாட்களுக்கு மழை பெய்யும் மாவட்டங்களின் லிஸ்ட் இதோ!!

Here is the list of rainy districts!!
 சென்னை:  தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பும்,எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
 திருநெல்வேலி மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாளை தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தேனி, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
14 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மலைப்பகுதிகள்  போன்ற பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15ஆம் தேதி தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்கள், கோயமுத்தூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி போன்ற இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை ஒரு சில பகுதிகளிலும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று கூறியுள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி,தேனி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
18 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram