தற்சமயம் ஜாதி சான்றிதழில் ஹிந்து அதன் உட்பிரிவு என்று இருந்த இடத்தில் இப்பொழுது சான்றிதழாரரின் உட்பிரிவு மட்டும் அச்சிடப்பட்டு வருகின்றது. இது பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இது திமுக அரசின் இந்து மதத்திற்கு எதிரான செயல் என்று வன்மையாக கண்டித்து வருகின்றனர். பொதுவாக பழைய சான்றிதழில் ஹிந்து என்று குறிப்பிடப்பட்டு அதன் பின் உட்பிரிவு குறிப்பிடப்படும். உதாரணத்திற்கு இந்து வன்னியர் கிறிஸ்துவ வன்னியர் என்று இரு பிரிவுகள் உள்ளன. ஆனால் தற்சமயம் வரும் ஜாதி சான்றிதழ்களில் வன்னியர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதற்கு முன் உள்ள ஹிந்து அதில் குறிப்பிடப்படவில்லை.
அது பிற்படுத்தப்பட்ட சமூகமா! மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமா! என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இது பள்ளிகளில் ஜாதி அடிப்படையில் கிடைக்கும் ஊக்கத்தொகைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் ஆசிரியர் குழு. இதனால் பல்வேறு ஹிந்து அமைப்பினர்களும் இதனை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து மக்களுக்கு எதிராக பெரும் சூழ்ச்சி நடைபெறுகிறது. இது ஒட்டுமொத்த இந்துக்களின் அடிப்படை உரிமையை பறுங்குவது போன்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பலரும் இது திமுக ஆட்சியின் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சி என்று தெரிவித்து வருகின்றனர்.





