தேனிலவுக்கு சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட கணவன்!! மனைவி கைது!!

கடந்த மே மாதம் திருமணம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் காதலித்த பெண்ணை கரம்பிடித்து இருந்தவர் தான் ராஜா ரகுவன்சி. இவரது மனைவி சோனம். பின் தேனிலவுக்கு புறப்பட்ட காதல் ஜோடி மேகலயாவுக்கு சென்றுள்ளனர். அங்கு வாடகை ஸ்கூட்டர் ஒன்று எடுத்துக்கொண்டு, ஊரை வலம் வந்துள்ளனர். பல அட்வெஞ்சர்ஸ் மூலம் என்ஜாய் செய்து வந்துள்ளனர்.

திடீரென்று விடுதியை விட்டு புறப்பட்டுச் சென்ற காதல் ஜோடியை காணவில்லை. கடைசியாக சோனம் தனது மாமியாரிடம் மலை மீது உள்ள அருவிக்கு செல்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு இருவரின் மொபைலும் கவரேஜ் ஆகவில்லை. அவர்கள் தங்கி இருந்த விடுதிக்கும் திரும்பவில்லை. எனவே குடும்ப உறவுகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேகாலயாவில் அவர்கள் தங்கி இருந்த இடம், பேக்கெஜ் ரெடி செய்த ஏஜென்ட்கள் ஆகியோரை போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

அதிர்ச்சிகரமாக அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பாதி உடல் அழகிய நிலையில் ராஜாவின் உடல் மீட்கப்பட்டிருந்தது. அவரின் கையில் உள்ள டாட்டோ மூலம் அவர் என்று உறுதி செய்துள்ளனர் போலீசார். அவர்கள் அங்கேயே அவரை எரிக்கச் சொன்ன போதும், குடும்பத்தினர் அவரது உடலை மத்திய பிரதேசத்துக்கு அழைத்து வந்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில் சோனம் ஒரு தாபாவில் இருந்து அவரது அண்ணனுக்கு கால் செய்துள்ளார். சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் சோனத்தை கைது செய்துள்ளனர். அவர்தான் ராஜாவை நான்கு பேர் கொண்ட கும்பல் மூலம் கொன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் இதை சோனத்தின் அப்பா இதில் ஏதோ மர்மம் உள்ளது. இருவரும் மனம் இணைந்து தான் திருமணம் செய்து கொண்டனர். மேகாலயா போலீசார் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை மேல்முறையீடு செய்யவும் முயல போவதாக கூறியுள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram