4 கி.மீ தொங்கியபடி சென்ற ஏட்டு!! சினிமா பாணியில் குட்கா கடத்தல்!! உயிரைப் பணயம் வைத்து குற்றவாளியைப் பிடித்த காவலர்!!

hosur-policeman-dragged-on-car-bonnet-4km-gutkha-smuggling-arrest-march-2026

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கடந்த மார்ச் 15 அன்று மாலை ஹட்கோ (Hudco) போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தும்படி தலைமை காவலர் ராஜீவ் காந்தி சைகை காட்டினார். ஆனால், காரை நிறுத்தாத ஓட்டுநர் யாரப் பாஷா (34), காவலர் மீதே காரை ஏற்றித் தப்பிக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய ராஜீவ் காந்தி, காரின் முன்பக்க பேனட்டில் (Bonnet) விழுந்தார். ஆனாலும் காரை நிறுத்தாத ஓட்டுநர், சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றார்.

காவலர் ராஜீவ் காந்தி காரின் பேனட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “காரை நிறுத்து” என்று அலறியும் ஓட்டுநர் கண்டுகொள்ளவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பின்னால் துரத்தி வந்த போலீசார், ஓசூர் தர்கா பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது கார் தடுப்புச் சுவரில் மோதியதில், ராஜீவ் காந்திக்குக் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

காரைச் சோதனையிட்டதில், உள்ளே சுமார் ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 390 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பியோட முயன்ற ஓட்டுநர் யாரப் பாஷாவைப் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். உயிரைப் பணயம் வைத்து 4 கி.மீ தூரம் பேனட்டில் தொங்கியபடி சென்ற காவலரின் துணிச்சலை மாவட்ட எஸ்.பி மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது காயமடைந்த காவலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram