காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது செங்கடலில் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
கப்பலில் பயணிக்கும் ஊழியர்கள், பயணிகளை சிறை பிடித்து வைப்பது, பணியாளர்கள் மற்றும் கப்பலில் உள்ள பொருட்களை வைத்து சூறையாடுவதும் போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் கிளர்ச்சியாளர்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய படைகளுக்கு இவற்றை கட்டுக்குள் கொண்டு வர கட்டளையிட்டார்.
செங்கடலில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் வந்த “எட்டர்னிட்டி சி” சரக்கு கப்பலை கடுமையாக தாக்கியதில் கப்பல் பணியாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஐரோப்பிய கப்பற்படை அதிகாரிகள் தெரிவித்த தகவலில், கப்பலில் இருந்து 25 பேரில் ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பலை கடுமையாக தாக்கியதால் தான் கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது என்றும் கூறினர். பயங்கரமான தாக்குதலுக்கு பிறகு கப்பல் மூழ்கி விட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கடல் பகுதியில் கப்பல்களில் பாதுகாப்பு பற்றி எதுவும் தெரியாதது வருத்தமளிக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு டிரில்லியன் மதிப்புள்ள சரக்கு கப்பல்கள் கடல் வலியை ஒரு ஆண்டில் மட்டும் பயணம் செய்கிறது. இதனால் தான் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குகின்றனர்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 100 க்கும் மேற்பட்ட கப்பல்களை கிளர்ச்சியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். செங்கடலில் சரக்கு கப்பல்களை மூழ்கடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் .