புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து நாடாளுமன்ற நம் மாநிலங்களவையில் அவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய வெளியுறவு இணை மந்திரி கீர்த்தி வரதன் சிங் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு குறித்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவரதன் சிங் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் வெளியிட்ட தகவலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 வரை பிரதமர் மோடி சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கு செலவான 295 கோடி ரூபாய் மதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாத சுற்றுப்பயணத்திற்கு 25 கோடி 59 லட்சம் ரூபாய் செலவானதாக கூறப்பட்டுள்ளது. அதே மாதத்தில் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்ட போது அதற்கு 16 கோடி 54 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டு சவுதி அரேபியா பயணத்தின் போது 15 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவானதாக தெரிவித்துள்ளது. தாய்லாந்து பயணத்திற்கு 4 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவு ஆனது. மேலும், இலங்கை பயணத்தின் போது 4 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவானதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2024 வரை நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட செலவு சுமார் ரூபாய். 295 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நமீபியா பிரேசில், கானா, மொரிசியஸ், சைப்ரஸ், குரோசியா, டிரினிடாட்-டொபாகோ, கனடா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட செலவு குறித்து விவரங்கள் கிடைக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.