மகளிர் உரிமை தொகை நீங்கள் வாங்கவில்லையா!! முதல்வரே அறிவித்த புதிய அப்டேட்கள்!!

மகளிர் உரிமைத்தொகை நடப்பாச்சி திமுகவின் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆக உள்ளது. இது கடந்த தேர்தலின் போது வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு நடப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு விண்ணப்பங்கள் எல்லாம் ரேஷன் கடை வாயிலாக கொடுக்கப்பட்டு, முகாம்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் தோறும் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் அப்பொழுது தகுதி இருந்தும் ரிஜெக்ட் செய்யப்பட்டவர்கள், அப்பொழுது இதெல்லாம் எங்கே கிடைக்கப் போகுது என்று அசால்ட் ஆக பதியாமல் விட்டவர்கள் எல்லோருக்கும் அரசு தற்சமயம் மறு வாய்ப்பு அளிக்க உள்ளது. இதற்கான புதிய முகாம்கள் வருகின்ற ஜூலை 15 முதல் தொடங்கிய அக்டோபர் மாதம் வரை நடக்க உள்ளது. இதற்கென்று தனியாக தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து முதல்வர் நல திட்டங்கள், இலவச செக்கப்ஸ் ஆகிய சர்விஸ்களை எடுத்துக் கூறி முகாம்களுக்கு உங்களை வரவழைத்து, அதற்கான வழிமுறைகளையும் வழங்கி விண்ணப்பத்தை பில்லப் செய்து அவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட்டால் போதும்.

அடுத்த 15 நாட்களுக்குள் உங்கள் தகுதி செக் செய்து விட்டு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கிலும் மாதா மாதம் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த முகாம்கள் மூலமாகவும் அல்லது நீங்கள் பொருட்கள் ரெகுலராக வாங்கும் ரேஷன் கார்டு ஊழியர்களிடமும் இது குறித்த விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram