வெயில் காலங்களில் முகத்தை நன்றாக ஐஸ் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் பின்பு பவுண்டேஷனை நான்கு சொட்டு எடுத்து அதில் ஒரு சொட்டு தண்ணீர் கலந்து முகம் முழுவதும் பூச வேண்டும் முகம் மட்டுமல்லாமல் கழுத்து பகுதி காது மடல் ஆகிய இடங்களிலும் பவுண்டேஷனை பூச வேண்டும் பவுண்டேஷனை சீராக ஒரே மாதிரியாக இருக்கும் அளவிற்கு பூசினால் நல்லது பின்பு அதே கலரில் உள்ள பவுடரை பவுண்டேஷன் மீது போட வேண்டும் கண்களின் மேல் பவுடர் மேக்கப் அந்தந்த புடவைக்கு தகுந்த மாதிரி உள்ள கலரை லேசாக பூச வேண்டும் கண்டிப்பாக கண்மை அதிக அளவு பூசக்கூடாது.
ஏனெனில் இரவு படுக்கும் போது சிறிய கோடுகளாக கலைந்து காலையில் அது முகத்தை அழகாக காட்டாது. இரவில் தூங்கும் பொழுது சிறிய கூடாத கண்மை பூசலாம் அது மறுநாள் அழகாக காண்பிக்கும்.
கண் இமைகளை பெரிதாக காட்ட மஸ்காரா போட வேண்டும் காலையில் திருமணத்திற்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என செல்பவர்கள் லிப்ஸ்டிக் போடலாம் மாலை நேரத்தில் நல்ல அடர்த்தியான நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் லிப்ஸ்டிக் போடும் பழக்கம் இல்லாதவர்கள் லிப் கிளவுஸ் லிப் பாம் போன்ற பயன்படுத்தலாம் கை நகங்களை சீராக வெட்டி அழுக்கு இல்லாமல் சுத்தம் செய்து லேசான பாலிஷ் போட்டால் மிகவும் அழகாக இருக்கும்.
வெயிலுக்கு ஏற்ற ஆடையை பருத்தி ஆடையை சுத்தமான பருத்தி ஆடைகளையே பயன்படுத்த வேண்டும் தினமும் உங்கள் உடை நடை பாவனை உங்கள் அழகு ஜொலிக்க வேண்டுமே தவிர நீங்கள் போடும் நகைகளில் அல்ல அதனால் வெயில் காலங்களில் நகைகளை அதிகமாக அணியக் கூடாது.
ஒரு மெல்லிய சங்கிலி இரண்டு வளையல்கள் போட்டால் மிகவும் அழகாக இருக்கும் திருமணத்திற்கு எப்பொழுதும் பட்டுப்புடவைகள் தான் கட்ட வேண்டும் என்பதை மாற்றி நல்ல தரமான பருத்தி புடவையை அணியலாம். ஏனெனில் வெயில் காலங்களில் உடம்பு அதிக அளவில் வேர்க்கும் இதனால் துர்நாற்றம் வர வாய்ப்பு உள்ளது முடிந்த அளவிற்கு பருத்தி புடவைகளில் நல்ல உடல் அமைப்பை காண்பிக்கும் தன்மை உண்டு. இவ்வாறு வெயில் காலங்களில் எளிமையாக அலங்காரம் செய்து கொள்வது மிகவும் நல்லது.