போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2011 போலீஸ் பணியில் சேர்ந்த இளைஞர் வீட்டிலேயே இருந்து 28 சம்பளத்தை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார்.
அவருக்கு போபால் போலீஸ் லைனில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் லைனிற்கு இளைஞர் சென்றுள்ளார். போலீசுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக சார் போலீஸ் பயிற்சி மையத்திற்கு அனுப்பி உள்ளனர். அப்போது இளைஞர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் நேராக வீட்டிற்கு சென்று விட்டார் அந்த இளைஞர். வீட்டிலேயே இருந்து பயிற்சி செய்யாமல் பயிற்சி குறித்த விவரங்களை மட்டும் ஸ்பீட் போஸ்டில் போபால் போலீசுக்கு அனுப்பி வைத்துள்ளார். சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருப்பது போல் பாவனை மட்டும் காட்டியுள்ளார்.
அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் பயிற்சி மையத்தில் உள்ளதாக நினைத்து உள்ளனர். மேலும், அவருக்கு மாதம் தோறும் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக சம்பளம் சென்றடைந்தது தெரியவந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர் கையும் களவுமாக சிக்கினார். 2011 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த போலீசார்களுக்கு வழங்கும் சம்பள உயர்வு குறித்து எடுத்து தொடங்கிய நடவடிக்கையின் போது இளைஞர் பணிக்கே வராமல் 12 ஆண்டுகளாக சம்பளம் பெற்றது தெரிய வந்தது. குறிப்பாக ரூ. 28 லட்சத்திற்கும் மேல் சம்பளத்தை பெற்றுள்ளார்.
அவரை விசாரித்ததில் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும், பணிக்கு செல்லாமல் இருந்ததற்கு காரணம் அதுதான் எனவும் கூறினார் இளைஞர். அதற்கு தகுந்த மருத்துவ சான்றிதழ்களை வழங்கியுள்ளார். போலீஸ் கார் பணிக்கே வராமல் சம்பளத்தை பெற்றதை திரும்ப செலுத்தும் படி கூறி பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், தற்போது வரை அவரிடமிருந்து 1.50 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை அவரது சம்பளத்திலிருந்து எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது போபால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.