துபாயின் மரினா பகுதியில் அமைந்துள்ள பிரபலமான மரினா பினாக்கிள் (Tiger Tower) கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து, வெறும் ஒரு கட்டடத்திற்கு மட்டும் அல்லாமல், நகரின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும் சவாலாக மாறியுள்ளது. 67 மாடிகள், 764 அபார்ட்மெண்ட்கள், 3,820 பேர் இந்த அளவுக்கு மக்கள் வசிக்கும் ஒரு கட்டிடம் மொத்தமாக தீக்கிரையாகியது என்பது, மிகவும் கவலையூட்டும் விஷயமாகும். வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில், கட்டிடத்தின் மேல் மாடிகளில் இருந்து திடீரென தீ பரவியது. அதிக பரபரப்பாக இருந்த அந்த நேரத்தில், மக்கள் வீட்டில் ஓய்வாக இருந்த நிலையில், திடீர் தீவிபத்து பெரும் பீதி ஏற்படுத்தியது.
“மாடிக்கு மேல் இருந்து வெப்பம் மற்றும் புகை வந்து கொண்டிருந்தது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. குழந்தைகளை தூக்கிக்கொண்டு கீழே ஓட வேண்டிய நிலை,” என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார். தீ விபத்து ஏற்பட்டவுடன், துபாய் சிவில் பாதுகாப்பு படையினர் (Dubai Civil Defence) மிக வேகமாக சம்பவ இடத்திற்கு வந்தனர். 100க்கும் மேற்பட்ட வீரர்கள், அரபு தொழில்நுட்பங்களை கொண்ட 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் அவசர ஆதரவு படைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டன.
சுமார் 6 மணி நேரப் போராட்டத்தின் பின் காலை 3.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. “ஒருவரும் உயிரிழக்கவில்லை. அதிகளவிலான காயங்களும் பதிவாகவில்லை. பாதுகாப்பாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.” மரினா பினாக்கிள், 2011-இல் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம். இதில் ஏற்கனவே 2015-ஆம் ஆண்டிலும் சிறிய அளவிலான தீவிபத்து நடந்தது.
இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது, கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் தற்காலிக பராமரிப்புகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தற்காலிகமாக வீட்டை இழந்த மக்கள், அருகிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சேஃஃல்டு ஹவுசிங் வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, உடை, மருத்துவம், குழந்தைகளுக்கான உதவிகள் அனைத்தும் கட்டிட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கம் வழங்கி வருகிறது.
இந்த தீவிபத்து, உயிரிழப்புகள் இல்லாமல் சமாளிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய நல்வரமாக இருந்தாலும், இது துபாயின் கட்டுமானப் பாதுகாப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்யும் கட்டாயமான தருணமாக மாறியுள்ளது.