திருவாரூர்: திருவாரூர் அருகே காரியங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் போதை ஆசாமிகள். இந்தப் பள்ளியில் காரியாங்குடி, இலங்கை சேரி மற்றும் நெம்மேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
காலை உணவு சமைப்பதற்காக சமையலறையை பார்த்தபோது மளிகை பொருட்கள் சிதறியும், சமையலறையில் இருந்த பொருட்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சமையல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சமையலற்கள் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்ட போது மாணவர்கள் குடிநீர் ஆபத்து உடைக்கப்பட்டு இருந்தது.
தொட்டியை உடைத்து தொட்டிக்குள் மனித கழிவுகளை கொட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியிலிருந்து வாழை மரங்களை சேதப்படுத்தியும், தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் பறித்தும், பள்ளி வளாகத்திலேயே சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து கிராம மக்கள் பள்ளியின் முன்பு ஒன்று திரண்டனர். மேலும், இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் அனைத்து சமூகத்தினரும் படித்து வருவதால் சாதி பிரச்சனை இல்லை என்றும், குடி போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளனர் என்று தெரியவந்தது.
மாவட்ட கலெக்டர் மோகன் சந்திரன் பேசுகையில், மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.