எரிக் சூறாவளியால் இருவர் பலி!! மெக்சிகோவில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்!! 

Hurricane Eric kills two in Mexico
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணம் ஓக்சாகாவில் எரிக் புயல் வியாழக்கிழமை கரை கடந்தது.  புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 பேர்  பலியாகியுள்ளனர். எரிக் என்ற புயல் கரையை கடந்தது என்பதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதிப்படுத்தியது. புயலால் பல பகுதிகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெக்சிகோவின் பசுபிக் கடலோரப் பகுதியில் சுற்றுலா நகருக்கு இருக்கின்றன. அகாபுல்கோ மற்றும் போர்ட்டோ எஸ்காண்டிடோ ஆகிய சுற்றுலா நகரங்களில் எரிக் புயல்  கரையைக் கடந்த போது பலத்த காற்று வீசியதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. எரிக் புயலால் பரவலாக கனமழை பெய்துள்ளது. வெள்ளப்பெருக்கில் பல்வேறு பகுதிகள் நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த  படகுகள் பலத்த  காற்று வீசியதன் மூலம் பெரிதும் சேதமடைந்தது. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் இருவர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை கண்டறியும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram