கான்பூர்: மகாபாரதத்தில் நடந்தது போல மனைவியை அடமானம் வைத்து சூதாட்டத்தில் இறங்கிய கணவர். கட்டிய கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்கள் ஏராளமான கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் அப்பாவி மனைவிகள் மற்றும் இளம் பெண்களை கூலிப்படைகளை வைத்து அவரது குடும்பத்தினர் அல்லது காதலனோ கொலை செய்கின்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
அந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணவன் சூதாட்டத்திற்காக எதையும் வைத்து விளையாடக்கூடிய அளவிற்கு போதை தலைக்கேறியிருந்தது. சூதாட்டத்தின் போது 7 ஏக்கர் நிலம் மற்றும் மனைவியின் நகைகள் என அனைத்தையும் வைத்து இழந்துள்ளார்.
எல்லை மீறிய கணவன் தன்னுடைய மனைவி என்று பாராமல் அவரையும் அடமானம் வைத்து சூதாட்டத்தில் இறங்கியுள்ளார். இது மட்டுமல்லாது கணவரின் நண்பர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் அனுமதி அளித்துள்ளார். தாகத்திற்கு தண்ணீர் கூட தராமல் அந்தப் பெண்ணை துன்புறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியின் கை விரல்களை உடைத்து சித்ரவதை செய்துள்ளார்.
அங்கிருந்து அந்தப் பெண் தப்பு சென்று 112 பெண்கள் உதவி மையத்திற்கு போன் செய்த பின் போலீசில் புகார் செய்யப்பட்டது. பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை நீதிமன்றத்தில் மட்டும் சொல்வேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பின் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.