மத்திய பிரதேசம்: சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் போல் மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலனே காதலியை கூலிப்படை வைத்து கொள்ளும் நிலை வந்து விட்டது. உத்திர பிரதேச மாநிலம் நகரில் வசித்து வந்த இளம் தம்பதிகள். கணவன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில் எந்த பொருளையும் வைத்து விளையாட கூடியவர்.
சூதாட்டத்தில் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் மனைவியின் ஆபரணங்கள் என அனைத்தையும் வைத்து இழந்துள்ளார். சூதாட்டத்தின் போதை தலைக்கேறிய அவர் தன் மனைவியையே அடமானமாக வைத்துள்ளார். தனது நண்பர்களை பாலியல் தூண்டலுக்கும் அனுமதி அளித்துள்ளார். தண்ணீர் கூட தராமல் கொடுமைப்படுத்தி பின் எதிர்த்து கேட்ட மனைவியின் விரல்களை உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.
பெண் தப்பித்து சென்று போலீசில் புகார் அளித்தார். அதேபோன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் இதேபோன்று சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயதினர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார்.
அந்த வகையில் சூதாட்டத்தில் 50 ஆயிரம் வரை கடன் பெற்றிருக்கிறார். தனது நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கியதை அடைக்க முடியாமல் நண்பர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். கடனை அடைப்பதற்காக நண்பர் ஒருவருக்கு தனது மனைவியை அடமானமாக வைத்துள்ளார். அந்த நபரும் பாலியல் அடிமை அனைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்த நண்பரின் கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து மகளிர் போலீசாருக்கு சென்று புகார் அளித்தார். கணவன் மற்றும் கணவரின் நண்பர் மீது புகார் அளித்தார். Zero FIR அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவர் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த நண்பர் ஆகியோரை தார் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.