கிரிக்கெட் : ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் வீரர் ஒருவர் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு அணிகளும் மோதின இந்த போட்டியில் முதலில் லக்னோ அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 190 ரன்கள் அடித்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
அடுத்து களம் இறங்கிய லக்னோ அனி 16 புள்ளி ஒரு ஓவரின் ஆட்டத்தையும் முடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது இதில் குறிப்பாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபடியும் மிட்செல் மார்ஷ் அரை சதத்தை பூர்த்தி செய்து விரைவாக வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு ஹைதராபாத் 9.4 ஓவரில் லக்னோவுடன் வெற்றியை பதிவு செய்தனர் அதற்கு பலி வாங்கும் விதமாக இந்தப் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது லக்னோ அணி.
இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி தொடக்க வீரர் 42 ரன்கள் எடுத்திருந்தனர் கேட்டிருந்தார் அடுத்து களம் இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி நீண்ட நேரமாக 6, பவுண்டரி என அடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய அவர் கோபத்தில் ஹெல்மெட்டை தூக்கி அடித்த காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.