கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் டெல்லி இடையேயான போட்டியில் அதிரடியாக விளையாடி அபார வெற்றி பெற்ற டெல்லி அணி.
நேற்று மதியம் தொடங்கிய ஹைதராபாத் மற்றும் டெல்லி இடையில் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா ஒரு ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷான் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இப்படி தொடக்கத்திலேயே டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் ஹைதராபாத் தனி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
டிராவிஸ் ஹெட் எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்க 22 ரன்களில் அவுட் ஆனார். புதிய இளம் வீரரான அணிக்கேத் வர்மா சிறப்பான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 41 பந்துகளில் 74 ரன்கள் அணிக்கு சேர்த்தார் இதில் ஐந்து பௌண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கும். டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3.4 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 18. 4 ஓவரில் 163 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஹைதராபாத் அணி.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 16 வது ஓவரில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அனைத்து ஐபிஎல் ரசிகர்களும் பெரிதாக தூக்கிப் பேசிய ஹைதராபாத் அணி ரன்னடிக்க முடியாமல் திணறுவதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.