அடிமாட்டு விலையில் மைக்ரோ SUV!! செக்மென்ட்டிலேயே முதல்முறை ‘டேஷ்கேம்’ வசதி.. ஹூண்டாயின் அதிரடி விலைப் பட்டியல்!!

hyundai-exter-facelift-2026-launched-india-price-specs-features-tata-punch-rival

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) பிரிவில் கொடிகட்டிப் பறக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter), தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அவதாரத்தில் களமிறங்கியுள்ளது. நேற்று (மார்ச் 20, 2026) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் ஆரம்ப விலை ரூ.5.80 லட்சம் (Ex-Showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் போன்ற கார்களுக்குப் போட்டியாகக் கருதப்படும் இந்த மாடலில், டிசைன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என மொத்தம் 25-க்கும் மேற்பட்ட முக்கிய மாற்றங்களை ஹூண்டாய் செய்துள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்க கிரில் பகுதி இப்போ இன்னும் அகலமாகவும், ஸ்போர்ட்டியான புதிய பம்பர்களுடனும் மிரட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த 2026 மாடலில் செக்மென்ட்டிலேயே முதல் முறையாக ‘பில்ட்-இன் டேஷ்கேம்’ (Dashcam) மற்றும் 60-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் (Bluelink) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உட்புறத்தைப் பொறுத்தவரை, பழைய கருப்பு நிறத்திற்குப் பதிலாக ‘நேவி ப்ளூ மற்றும் கிரே’ கலந்த டூயல் டோன் தீம் மற்றும் மெட்டல் பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி, அதே நம்பிக்கையான 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் தொடர்கிறது. இது மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) என இரு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மேலும், சிஎன்ஜி (CNG) பிரியர்களுக்காக ‘Hy-CNG Duo’ தொழில்நுட்பம் மூலம் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி (ESC) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்பதிவுகள் ரூ.11,000 கட்டணத்தில் தற்போது அனைத்து ஷோரூம்களிலும் தொடங்கியுள்ளன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram