கிரிக்கெட்: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற பின் சென்னை திரும்பிய ஜடேஜா சிஎஸ்கே அணியின் பயிற்சி ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்கான சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியின் இறுதியில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் இதனால் பலரும் இவரை கொண்டாடினர்.
இவர் இந்த இறுதிப் போட்டியில் பவுண்டரி அடித்து போட்டியை முடித்தது சிஎஸ்கே அணியில் இறுதிப்போட்டியில் இதேபோன்று பவுண்டரி அடித்து கோப்பை வென்றது ஞாபகப்படுத்தியதாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. தற்போது சாம்பியன் டிராபி கோப்பை தொடரை முடித்த பின் ரவீந்திர ஜடேஜா சி எஸ் கே அணியின் வலைப்பயிற்சியில் இணைந்தார்.
வலைப்பயிசியில் இணைந்த பின் அவர் பேசிய வீடியோ ஒன்றை சிஎஸ்கே instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறுகையில், தற்போது நிம்மதியாக இருக்கிறது என் வீட்டுக்கு திரும்பியது போல் தோன்றுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும் வியப்புடனும் இருக்கிறேன் அவரை சந்திக்க வேறு யாருமில்லை தல தோனி தான். அது மட்டுமல்லாமல் அஸ்வினுடன் நிறைய பேச வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் அவர் என்னுடைய பௌலிங் பார்ட்னர் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.