எனக்கு கேப்டன்சி வேண்டாம்.. நிராகரித்த கேஎல் ராகுல்!! டெல்லி அணியின் அடுத்த கேப்டன் யார்??

I don't want captaincy.. KL Rahul rejects it

Cricket: டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் பதவிக்காக முதல் கேள்வி நிலையில் தற்போது அவர் அந்த பதவி நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளுக்கான வீரர்களும் அணிகளுடன் இணைந்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து வெற்றியை கொண்டாடி முடித்தவுடன் ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நிலையில் உள்நாட்டு வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் அணியில் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கே எல் ராகுலை ஏலத்தில் 14 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் தேர்வு செய்யப்படுவார் என கூறிவந்த நிலையில் நேற்று இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதில் கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பஞ்சாப் அணி மற்றும் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கும் நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் இவர் ஒரு வீரராக மட்டுமே விளையாட விரும்புவதாகவும் கேப்டன் பதவியை நிராகரித்த தாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் அடுத்த கேப்டனாக அக்சர் படேல் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு தேர்வாக தென்னாப்பிரிக்கா அணியின் முக்கிய வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரரான பஃப் டூ பிளிசிஸ்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram