மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
குறிப்பாக 5 வயது முதல் 80 வயது வரை பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் மற்றும் கொடூர தாக்குதல்கள் என சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தொடர்ந்து சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.I love you is not a sexual offense.
பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பெண்ணின் உடல் அமைப்பு, அழகா இருக்கிறாய், நீ மிகவும் புத்திசாலி, நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா, உனக்கு என்னை பிடிக்குமா, உன்னை எனக்கு பிடிக்கும் போன்ற வார்த்தைகளை வாட்ஸ்அப் செயலி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்புவது ஆபாசமானது என ஹை கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஒருவர் “ஐ லவ் யூ” என்ற வார்த்தையை பெண்ணுக்கு சொல்லும் போது போக்சோவின் கீழ் வராது எனவும், அது பாலியல் நோக்கம் அல்ல என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த இளைஞன் கடந்த 2015 ஆம் ஆண்டு 17 வயதுடைய மாணவிக்கு கரம் பிடித்து ஐ லவ் யூ என்ற கூறியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது ஐபிசி செக்சன் 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின் தொடர்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆசைப் படுத்தப்பட்ட பின் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இளைஞர் மீது மேல்முறையீடு செய்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. பாலியல் நோக்கத்தில் தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என நாக்பூர் அமர்வு நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே கூறினார். பாலியல் நோக்கத்தில் சொல்லப்படுவது ஐ லவ் யூ என்ற வார்த்தையில் எடுத்துக்கொள்ள முடியாது.
ஒருவர் மீது காதல் வயப்பட்டு உணர்வுகளை வெளிப்படுத்தினால் ஐ லவ் யூ என்று சொல்லப்படுவதை பாலியல் நோக்கத்தில் கூறப்படுவதாக எடுத்துக் கொள்ள முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி உணர்வுகளை வெளிப்பாடாக சொல்லப்படுவது ஐ லவ் யூ என்ற வார்த்தை என்றும், குற்றம் சாட்டிய இளைஞர் குற்றம் அற்றவர் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார் நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே.