தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை முதல் படமாக அமைந்தாலும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்த படமாக செல்வராக அவனுக்கு அமைந்தது. இது முழுமையாக அவரால் எடுக்கப்பட்ட படம் இல்லை கையில் சேர்ந்த படம் என்றாலும் அதனை நல்லபடியாக திறமையாக இயக்கி முடித்திருக்கிறார் செல்வராகவன். அதிலும் குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படி படிப்படியாக தன்னுடைய திறமையால் வளர்ந்து வந்த செல்வராகவன் அவர்கள் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து அதன் பின்பு விவாகரத்தும் பெற்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இயக்கத்திலிருந்து ஓய்வெடுத்து தற்பொழுது நடிப்பில் அதிக அளவு கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இது போன்ற ஒரு தருணத்தில் செல்வராகவன் குறித்து அவருடைய தந்தை மற்றும் இயக்குனரான கஸ்தூரிராஜா தெரிவித்து இருக்கக்கூடிய விஷயம் வைரல் ஆகி வருகிறது. அதாவது தன்னுடைய சினிமா அனுபவத்தை வைத்து செல்வராகவன் அவர்களை பல இயக்குனர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்து விட முற்பட்ட பொழுது யாருமே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சினிமா வாரிசாக அவர் தொடர வேண்டும் என தான் நினைத்ததில்லை என்றும் அவனுக்கு திறமை இருப்பதால் நான் முற்பட்டேன். ஆனால் அது கைகூடி வரவில்லை என புலம்பி இருக்கிறார்.
எனினும் அவனுடைய திறமையால் அவன் மிகப்பெரிய இயக்குனராகவும் தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் அவனும் ஒருவனாக இருப்பது அவனுடைய தலை எழுத்து என்றும் தலையெழுத்து ஒருவரை எப்படி மாற்ற நினைக்கிறதோ அவ்வாறே கட்டாயமாக மாற்றி முடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.