நாதக தலைவர் சீமான் வீட்டில் சம்மன் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் இன்றி வெளியே ஒட்டப்பட்டு சென்றுள்ளது. ஏற்கனவே குடும்பத்தார்களிடம் மார்ச் 27 ஆம் தேதி தலைவர் இருப்பாரா! என்று கேட்டு விசாரித்து சென்றுள்ளனர். அவர் கிருஷ்ணகிரியில் இருப்பார் என்ற செய்தி அறிந்தும், அவர் இல்லாத வேளையில் வீட்டில் உள்ளவர்களிடம் எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படாமல் வெளியே ஒட்டி சென்றுள்ளனர்.
வீட்டின் வெளியே மீடியா பீப்பிள்ஸ் கூட்டம் இருந்ததால், நான்தான் அந்த சம்மனை படிக்க வேண்டும் என்று கிழித்து வர சொன்னேன். நான் நைட் டிரெஸ்ஸில் இருந்தேன். அதனால் என்னால் பிரஸ் பீப்பிள் முன்னால் வெளிவர முடியவில்லை. இது திட்டம் போட்டு செய்த காரியம். நாங்கள் சம்மனை கிழித்த கண நிமிடத்தில் நீலாங்கரை போலீசார் அங்கு வந்ததற்கு காரணம் என்ன? எங்கள் வீட்டில் வேலை புரியும் காவலாளி அண்ணனை சட்டையை பிடித்து கசக்கி இழுத்துச் சென்று உள்ளார்கள். எனக்கு என்னவென்று புரியவில்லை.
அண்ணன இழுத்துட்டு போறாங்களேன் வெளியே ஓடி வந்து பார்த்தா! அவர் கசங்கிய உடையில் என்னிடம் பாத்தீங்களாமா! அப்படின்னு கேட்டார். அவர் ஒரு எக்ஸ் மிலிட்டரி மேன். கையில் gun காண அனுமதி சீட்டு எப்போதும் வைத்திருப்பார். அவர் இந்தவாறு மரியாதை குறைவாக நடத்தப்பட்ட போது, நான் என்ன செய்வது என்று தெரியாமல் சாரி சார் விட்டுடுங்க அவரை என்று கேட்டேன். இது வீம்புக்கு என்று எங்களை மெண்டல் பிரஷர் செய்வதற்காக திட்டமிட்டு நடைபெற்ற சதி என்று தெரிவித்துள்ளார்.





