ஜிவி பிரகாஷ் படத்துல நடிச்சா மியூசிக் போயிடுமேன்னு சொன்னேன்!! வெற்றிமாறன் ஓபன் டாக்!!

Vetimaaran Open talk

கிங்ஸ்டன் படம் வரும் மார்ச் 7ஆம் தேதி திரையுலகில் வெளிவரும் நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் சிறப்பு விருந்தினர்களாக பா.ரஞ்சித், சுதா கொங்கரா மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் அழைக்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று உள்ளது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக களம் காண விரும்பிய போது ஜிவி பிரகாஷ் எனக்கு போன் செய்து இருந்தார். நான் வீட்டில் ஒரு ரூமில் இருந்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வெளியே வரணும் நடிக்கணும் என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் வேண்டாம் அப்படி செய்தால் உங்கள் மியூசிக் கேரியர் ஈடுபாடு குறைந்து விடும் என்றேன். ஆனால் இப்பொழுது அவரின் இசை உச்சத்தை தொட்டு வருகிறது. நடிப்பிலும் தன் திறமையை முழுமூச்சாக காட்டி வருகிறார்.

“பேரலஸ் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தற்சமயம் கிங்ஸ்டன் திரைப்படத்தையும் நடித்து உருவாக்கியுள்ளார். அவர் தயாரிப்பாளராக மாறும் முன்னரும் எனக்கு போன் செய்து இருந்தார். எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றாலும், எப்பொழுது போன் செய்தாலும் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி போன் பேசிவிட்டு தான் செல்வார். நான் பிஸியாக இருக்கிறேன் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. அவ்வளவு இயல்பானவர்.

அவர் தொடர்ந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறார். இன்னும் கற்றுக் கொள்வார். அவரிடம் திறமை உள்ளது அதனை வளர்த்துக் கொள்ளும் பக்குவமும் உள்ளது என்று பெருமைப்படுத்தியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram