எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிச்சாமி தலைமையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ஆளும் கட்சி மீதும் சட்டப்பேரவை தலைவர் மீதும் தங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கும் எதிர்க்கட்சி தலைவரான பழனிச்சாமி அவர்களுக்கும் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி இன்று அதிமுகவினர் அனைவரும் காலையில் சட்டப்பேரவைக்க வரும் பொழுது கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இதற்கு முன்னதாக ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று யார் அந்த தியாகி ? என்ற பதாகையை அனைவரும் அணிந்திருந்ததாகவும் இதற்கு சட்டப்பேரவை தலைவர் மு அப்பாவோ அவர்கள் கண்டனம் தெரிவித்து பதாகைகளை கழட்ட சொல்லி இருக்கிறார்.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கும்படி அதிமுகவினர் மேலும் பல பதாகைகளையும் கூச்சல்களையும் எழுப்பவே அடையாளம் காணப்பட்ட 14 அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனைகளை தொடர்ந்து தான் இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் மீது தங்களுடைய எதிர்ப்புகளை வெளிக்காட்டி உள்ளனர்.