சும்மா விட நான் ஒன்னும் கிறுக்கன் இல்லை ராஜா!! சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!!
முன்னாள் அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மாபா பாண்டியராஜன் அவர்கள் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஒரு குறுநில மன்னரைப் போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சிவகாசியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாபா பாண்டியராஜனின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
மாவட்டச் செயலாளராக நான் இருக்கிறேன். ஆனால் என்னை விடுத்து மாபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் நான் சும்மா இருப்பேனா?? பல கட்சிகளில் மாறிவந்த மாபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகியின் கன்னத்தில் அறைந்தேன். கட்சியை காட்டி கொடுத்த மா.பா.பாண்டியராஜனுக்கு சால்வையை அணிவிப்பதா?? அதற்கு நான் விட்டு விடுவேனா?? நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒன்றும் கிறுக்கனோ?? பைத்தியக்காரனோ?? இல்லை.
விருதுநகர் அதிமுக கட்சியில் நான் ஒரு குறுநில மன்னர் தான். எனக்கு பின்னால் எனது கட்சியில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாள் ஏந்திய படைவீரர்கள். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது என்னைப் பற்றி பேசுவதற்கு?? என கொந்தளித்தார்.
என்னைப் பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். ஏன் சென்னையில் சென்று பேசுகிறார் பாண்டியராஜன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குழிப்பறிக்கும் வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.