மக்கள் நாயகன் என அழைக்கப்படக்கூடிய ராமராஜன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தை யாராலும் மறக்கவே முடியாது. சரியாக 80 மற்றும் 90களில் இவர் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்தவர்.
அந்த காலகட்டத்தில் சிறந்த நடிகையாக திரையுலகில் தோன்றிய நளினியை காதலித்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகரான எம்ஜிஆரின் தனிமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில மன கசப்புகளில் காரணமாக இருவரும் 2000 ஆவது ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்கள் 25 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து விட்டனர் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி இருக்கிறது.
இந்த தகவல் குறித்து ராமராஜன் தெரிவித்திருப்பதாவது :-
நாங்கள் இருவருமே மனமுவந்து பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனக்கு இந்த தனிமையான வாழ்க்கையை பழகிவிட்டது. இதற்கு மேல் நாங்கள் இருவரும் இணைவோம் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு விஷயத்தை குறித்து பேசும்பொழுது அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதோ என ஆராய்ந்து அதன் பின்பு தான் பேச வேண்டும் என்றும் தேவையில்லாத விஷயங்களை பொய்களை பகிர்வதன் மூலம் அவர்களுக்கு என்னதான் சந்தோஷமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதால் எங்களுடைய மன உளைச்சல் மற்றும் எங்கள் பிள்ளைகள் அது மன உளைச்சல் போன்றவை அதிகரிப்பதாகவும் இனி இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் நடிகர் ராமராஜன் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.