10ம் மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! துணைத் தேர்வு ஹால்டிக்கெட்டுகள் வெளியீடு!!

தமிழ்நாட்டில் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளன. கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 7,92,494 மாணவர்கள் எழுதி, 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றனர். 39,352 மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறினார்கள். மேலும், 10,049 பேர் தேர்வுக்கு வரவே இல்லை. இவர்கள் அனைவரும் ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை நடைபெறும் துணைத் தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்கிடையே, 10ம் வகுப்பு தேர்வில் 6.20% மாணவர்கள் தோல்வியடைந்தனர். 11ம் வகுப்பில் 8.81% மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 10ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை, 11ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் 11ம் தேதி வரை நடைபெறும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூன் 25ம் தேதி முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை தேவைப்படும். 11ம் வகுப்பு தனித் தேர்வர்கள், செய்முறைத் தேர்வுகள் குறித்து தங்களுக்கான தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் செய்முறைத் தேர்வுகள் ஜூன் 26 முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலரை அணுக வேண்டும். தேர்வுக்கால அட்டவணை, ஹால் டிக்கெட்டு மற்றும் மற்ற விவரங்களை அறிய, அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தை பார்வையிடலாம். www.dge.tn.gov.in

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram