சம்பவம்னா நான்தான் சக்கரவர்த்தி.. வருண் பந்துவீச்சு!! வாயடைத்து போன மூத்த வீரர்கள்!!

Cricket : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி லீக் போட்டியில் வரும் சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் கடைசி லீக் போட்டியான நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் நேற்று விளையாடியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் அரையறுதி போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் முக்கிய வீரர்கள் ஆட்டத்தை இழந்து சென்றாலும், ஸ்ரேயர்ஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 249 அடித்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயித்தது.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்த அணி 205 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. இவர் இங்கிலாந்து தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைத்து ஆட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலும் இடம் பிடித்தார். முதல் இரண்டு போட்டியில் விளையாடாத நிலையில் இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாடினார்.

இந்தப் போட்டியில் இவர் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். வில் யங், மிட்செல் சான்டனர், பிலிப்ஸ், பிரேஸ்வெல், மேட் ஹென்றி என ஐந்து முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார் வரும் சக்கரவர்த்தி. தற்போது இணையதளங்களில் வருண் சக்கரவர்த்தி செய்த இந்த சாதனையை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram