புதுடெல்லி: 2024 2025 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் முடிவடைந்தது.
இந்நிலையில் அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க போவதாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஐ டி ஆர் வடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் குறித்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக வருமானத்துறை தெரிவிக்கப்பட்டது. கால அவகாசம் ஈட்டி பின் படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ( செப்டம்பர் 15ஆம் தேதி) இன்றுடன் முடிவடைகிறது.
இன்றைய தேதி நிறைவடைவதற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் வருமானத்திற்கு ஏற்ற அபராதம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. வரி செலுத்துவோர் அவர்களது வருமான வரிகளை அவசர அவசரமாக தாக்கல் செய்து வருகின்றனர்.
வரி செலுத்துவோர் கணக்குகளை தாக்கல் ஒரே நாளில் பலரும் செலுத்துவதால் இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறால் வரி செலுத்துவோர் பலர் அவதிப்படுகின்றன. இது வரி செலுத்தும் காலத்தை மேலும் தாமதிக்க செய்யும். இந்நிலையில் இன்றைய தேதிக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வார்களா? என கேள்வி எழுந்துள்ளது.


